பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
சென்னிமலை :சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம், ஏழாம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.நாளை (24ம் தேதி), 48வது நாளாகும். அன்றுடன், மண்டல பூஜைகள் நிறைவடைகிறது.நாளை காலை, ஒன்பது மணிக்கு மேல், இதற்கான நிகழ்ச்சிகள் துவங்குகிறது.இதில், விநாயகர் வழிபாடு, சங்கு வைத்து சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, யாகசாலையில் ஹோமம் வளர்த்து, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பின் கலசம் கொண்டு செல்லுதலும், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.