பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
பெருந்துறை: பெருந்துறை பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, வரும், 29ம் தேதி, பெருந்துறை, கோட்டை முனியப்பன் கோவில் முன்புறம், ஒன்பது அடி உயர சிலையும், பழைய பஸ் ஸ்டாண்டில், ஏழு அடி உயர சிலையும் பிரதிஷ்டை செய்கின்றனர்.தவிர, கோட்டைமேடு, சென்னிவலசு, மேக்கூர், குன்னத்தூர் ரோடு, துடுப்பதி லட்சுமிபுரம் உட்பட பல இடங்களில், மூன்று அடி உயர சிலைகள் பிரதிஷ்டை செய்கின்றனர். காஞ்சிக்கோவில் கிழக்கு ரத வீதியில், ஆறு அடி சிலை, திங்களூர் பிரிவு, புலவர்பாளையம், விநாயகர் கோவில் வளாகம், செங்காளிபாளையம், கொண்டையன்காட்டுவலசில், மூன்று அடி சிலையும் பிரதிஷ்டை செய்கின்றனர். வரும், 31ம் தேதி மாலை, இச்சிலைகள், ஊர்வலமாக எடுத்து சென்று, கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்படும்.