உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் சன்மார்க்க சங்கம் சார்பில் உலக உயிரினங்கள் நலன் வேண்டி ஆவணி மாத பூச விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் 8 மணி வரை சிறப்பு வழிபாடு, அகவல் பாராயணம் நடந்தது. அப்போது புதியதாக ஜோதி விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை அப்பர் மடாதிபதி ஞானதேசிகர், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.