திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு திருப்பணிகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், நேற்று முன்தினம் வந்தார். திருப்பணிகளை பார்வையிட்ட அவர், நிருபர்களிடம் கூறுகையில், திருப்போரூர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் 11ம் தேதி காலை, 9:30 மணிக்கு துவங்கி 11:00 மணிக்குள் நடைபெறுகிறது.நாளை (25ம் தேதி) புதிய கொடிமரம் பிரதிஷ்டை காலை, 9:00 மணிக்கு துவங்கி, 10:00 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, என்றார்.செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.