புதுச்சேரி: வைத்திக்குப்பம் பக்தவத்சல குண பாண்டுரங்கன் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. வைத்திக்குப்பம் ராதா ருக்குமணி சமேத பக்தவத்சல குண பாண்டுரங்கன் கோவில் ௬ம் ஆண்டு பிரதிஷ்டை தின மகோற்சவம், 51ம் ஆண்டு ஜெயந்தி உறியடி உற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளாக 17ம் தேதி, ஜெயராம் திருமண மண்டபத்தில் வைணவ மாநாடு நடந்தது. அதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் , உறியடி உற்சவம் நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். வரும் 29ம் தேதி முதல் செப்டம்பர் ௭ம் தேதி வரை, லட்சுமி ஹயக்கிரீவர் கோவில் பிரமோற்சவ நிகழ்ச்சியில், இரவு திருவீதி பஜனை நடக்கிறது.