காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்காக, வரும், செப்.,4ம் தேதி காலையில், பாலாலயம் நடைபெற உள்ளது.காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், 60 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்காக வடக்கு மற்றும் தெற்கு ராஜகோபுரங்களுக்கான பாலாலயம் வரும், செப்.,4ம் தேதி காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரையில் நடைபெற உள்ளது.