கீழக்கரை : கீழக்கரையில் தென்பொதிகை அகத்தியர் கோயில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு நேற்று மூலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேக, ஆராதனைகளுடன் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. சிவநாம அர்ச்சனை, அகத்தியர் பாடல்கள், முருகன் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது.