சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆவணி மாத பூச விழா நடந்தது. மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், வைத்திலிங்கம், நாராயணன் முன்னிலை வகித்தனர். சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம் வரவேற்றார். மன்ற பூசகர் தமிழ்மணி அடிகள், நூலகர் சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்தனர். சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சைவசித்தாந்த அன்பர்கள் நடேசன், ராமதாஸ், டாக்டர் சுகுமார், அன்பழகன், ராஜலட்சுமி, மலர்விழி, மூர்த்தி, வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.