பதிவு செய்த நாள்
26
ஆக
2014
01:08
கோவை : கோவை நகரில் கோவிலுக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை மீட்கக்கோரி, ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன சமிதி சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் கோவிந்தராமானுஜதாசர் அளித்துள்ள மனு: கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர், அறநிலையத்துறைக்குச் சொந்தமான கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தனது 13 ஏக்கர் 31 சென்ட், 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை, கடந்த 1922ல், கோவில் நந்தவன பயன்பாட்டுக்கு வழங்கினார். அந்நிலம், தனிநபர்கள், கோவில் நிர்வாகிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலத்தை மீட்க, அறநிலையத்துறை உதவிக்கமிஷனர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தும், அமல்படுத்தப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.