நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்து விட்டு நம்மால் இயன்ற காணிக்கையை அர்ச்சகரின் தட்டில் போடுவோம். ஆனால் திருத்தணியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் பொன்பாடி கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோயிலில் மட்டும், நாம் எவ்வளவு தட்சணை போடவேண்டும் என்பதை கோயில் அர்ச்சகரே தீர்மானிப்பார். நாம் தட்சணையாக எவ்வளவு ரூபாய் போட்டாலும் அதிலிருந்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பக்தர்களிடமேத் திருப்பிக் கொடுத்து விடுவது சிறப்பு.