பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
பெங்களூரு : விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, தற்காலிக மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தித் தர, பெஸ்காம் முன் வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை, பல அமைப்புகள், சங்கங்கள் விமரிசையாக கொண்டாடுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், விதிமீறலாக, மின் இணைப்பை பெறுவதால், அசம்பாவிதங்கள் நடக்கிறது. இதை தவிர்க்க, பெஸ்காமே தற்காலிக மின் இணைப்பு வசதியை செய்துதர தீர்மானித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள், அருகில் உள்ள, பெஸ்காம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தற்காலிக மின் இணைப்பை பெற்று கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நமது பெங்களூரு, நமது பங்களிப்பு திட்டத்தின் கீழ், 300 நிறுவனங்கள் கைகோர்த்து உள்ளன. இதனால், இத்திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும். வரும் செப்., 4ம் தேதியன்று, மேயர் பதவிக்காலம் நிறைவடைகிறது. என் பதவிக் கால கட்டத்தில், போதுமான அபிவிருத்தி பணிகளை செய்த திருப்தி எனக்கு உள்ளது. சத்ய நாராயணா, பெங்களூரு மேயர்