பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வரசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25ம் தேதி அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. உடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை நடந்தது. 26ம் தேதி மங்கள கணபதி பூஜை மற்றும் இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 27ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்ப கணபதி பூஜை, கோ பூஜை, சூர்ய பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், உடன் மகா அபிஷேகமும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணி கமிட்டியினர், விழாக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.