பழநி கும்பாபிஷேகத்திற்கு மின்சாரம் தடையில்லாமல் வழங்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2014 02:08
திண்டுக்கல் : பழநி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,4 லிருந்து செப்.,7 வரை தடையில்லா மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஜெயச்சந்திரன் எஸ்.பி., இந்துஅறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி கலந்து கொண்டனர். கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: "பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் சன்னதி வீதியில் உள்ள வேளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் செப்.,7 ல் நடக்க உள்ளது. விழாவிற்காக செப்.,4 லிருந்து செப்.,7 வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பக்தர்கள் இடையூறின்றி சென்றுவர நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைக்க வேண்டும். கோயில் சுற்றுப்பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தேவையான மருந்துகளுடன் மருத்துவ குழுவினர் தயார்நிலையில் இருக்க வேண்டும். போக்குவரத்து கழத்தினர் கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஓட்டல்களில் சுகாதாரமான உணவு பொருட்கள், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், என்றார்.