புதுச்சேரி: உலகிலேயே மிக உயரமான 54 அடி உயர கிரகசாந்தி கணபதிக்கு, 1008 கொழுக்கட்டை படையல் நடந்தது. புதுச்சேரி அடுத்த மொராட்டாண்டியில் உள்ள, உலகிலேயே மிக உயரமான 54 அடி உயர கிரகசாந்தி கணபதிக்கு, விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1008 கொழுக்கட்டை படையலும், மகா கணபதி ஹோமமும் நடந்தது. கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடத்தப்பட்டு 108 தேங்காய் உடைக்கப்பட்டது. மகா கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் மற்றும் ஆலய ஊழியர்கள், லலிதாம்பிகை பாடசாலை மாணவர்கள் செய்திருந்தனர்.