பதிவு செய்த நாள்
30
ஆக
2014
12:08
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், உறியடி உற்சவம், நேற்று முன்தினம், கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரம், ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 17ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, தொடர்ந்து நடந்தது. இதை முன்னிட்டு, தினமும் மாலையில், திருமஞ்சனத்திற்கு பின், ஆலிலை கண்ணன், வெண்ணெய் தாழி கண்ணன், கோவர்த்தனகிரி, சகடாசூர வதம், வேணுகோபால கண்ணன், ஏணி கண்ணன், காளிங்க நர்த்தனம், ஊஞ்சல் கண்ணன், ஸ்ரீ கிருஷ்ண லீலை, குழலுாதும் கண்ணன் என, தினம் ஒரு அலங்காரமாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும், இரவு 7:30 மணியளவில், உபன்யாசம் நடந்தது. இறுதி நாளான, நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், திருமஞ்சனமும், பகல் 2:00 மணியளவில், கோலாட்ட பஜனையும் நடந்தது. மாலை 5:00 மணியளவில், உறியடி கண்ணனை வழிபட்டு, மாலை 6:30 மணிஅளவில், பக்தர்கள் உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது.