பதிவு செய்த நாள்
30
ஆக
2014
12:08
ராமேஸ்வரம்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு மேல் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் புறப்பாடாகி, திருக்கோயில் உபகோயிலான பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காட்டுபிள்ளையார் கோயிலில் விநாயகர் எழுந்தருளினார். அங்கு, விநாயகருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், திட்டகுடி, வர்த்தகன் தெரு, என்.எஸ்.கே. வீதி, சம்பை, எம்.கே. நகரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் வைத்துள்ள விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கீழக்கரை: கீழக்கரையில் நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. முன்னதாக கணபதி ஹோமம், உலக நன்மைக்கான பூஜை, விக்னேஷ்வர பூஜைகள் நடந்தது. பின்பு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், காஞ்சிரங்குடியில் கனவில் வந்த கணேசர் கோயிலில் விநாயகக்கு சிறப்பு பூஜை நடந்தது.திருவாடானை: திருவாடானை பாரதிநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பூக்குழி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.