Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்துநாள் கொண்டாட்டம்! ஒரு ரோமத்துக்கு ஒரு வருஷம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓணம் கொண்டாடக் காரணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
02:09

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தலைமையில், விஸ்வஜித் என்னும் யாகத்தை, மலைநாட்டு மன்னன் மகாபலி நடத்தினான். அந்த யாக குண்டத்தில் இருந்து வில், அம்பு, அம்புராத்துõணி, கவசம் என ஆயுதங்கள் வெளிப்பட்டன. அவற்றை மகாபலியிடம் வழங்கிய சுக்ராச்சாரியார், இவற்றின் மூலம் தேவர்களை வென்று, உலகையே ஆளும்படி வாழ்த்தினார். இதன்பின் தேவலோகம் மகாபலியின் வசம் வந்தது. மகாபலி நல்லவனாயினும், வெற்றி மமதையில் தனக்கு நிகர் தானே என்ற ஆணவமும் கொண்டிருந்தான்.இதனிடையே, தேவர்களின் தாயான அதிதி, தன் பிள்ளைகள் தேவர் உலகை இழந்தது கண்டு தவித்தாள். மகாபலியின் ஆணவத்தை ஒடுக்கி, தங்கள் உலகை மீட்டுத்தர வேண்டுமென விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தாள். அவளது வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன மூர்த்தியாக (குள்ள வடிவ அந்தணர்) ஆவணி மாதம் திருவோணத்தன்று அவதாரம் செய்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, உலகையே அளந்தார். எல்லாம் அவர் வசம் வந்தது. மகாபலியை ஆட்கொண்டு பாதாள லோகத்திற்கு அனுப்பினார். தேவர்கள் மகிழ்ந்தனர். தான், ஆட்கொள்ளப்பட்ட நாளை, விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவன் மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தான். அவனால் பல நன்மைகளைப் பெற்ற மக்கள், இன்று வரை திருவோணத் திருநாளன்று வரவேற்று மகிழ்கின்றனர். அந்த நாளே ஓணம் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar