பதிவு செய்த நாள்
04
செப்
2014
10:09
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் அருகில் உள்ள, சீனிவாச பெருமாள் கோவில், முன்தினம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. இதுகுறித்து, ஆந்திர மாநில அறநிலையத் துறை செயலர், சர்மா கூறியதாவது: புராதனமான சீனிவாச பெருமாள் கோவில் நிர்வாகப் பொறுப்பை, லோக்சபா முன்னாள் சபாநாயகர், அனந்தசயனம் அய்யங்கார் குடும்ப உறுப்பினர் ஏற்று நடத்தினர். ஆறு ஆண்டுகளுக்கு முன், கோவிலை, தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். தேவஸ்தானமும் ஒப்புக் கொண்டது. ஆனால், அறங்காவலர் குழு, கோவிலை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்மானத்தை, அரசுக்கு அனுப்பியது. இதை நிராகரித்த அரசு, தேவஸ்தானம் கட்டுப்பாட்டில், சீனிவாச பெருமாள் கோவிலை கொண்டு வர, உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல், கோவில், தேவஸ்தானம் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினசரி பூஜை நடத்தும் பொறுப்பை, தேவஸ்தானம் ஏற்றுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய கோயில்கள் :