வேடசந்தூர் : வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள பூங்காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. குடகனாற்றிலிருந்து கரகம் வானவேடிக்கை, கரகாட்டத்துடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின் கண் திறப்பு வைபவம் நடந்தது. பொங்கல் வைத்து, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து திரளானோர் வழிபட்டனர்.