புதுச்சேரி: திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (௭ம் தேதி) ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. திருபுவனையில், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (7 ம் தேதி) ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அதையொட்டி, காலை 7:30 மணி முதல் இரவு 9:00 வரை, 7 காலமாக ஏகதின லட்சார்ச்சனை விசேஷ வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.