புதுச்சேரி: பெரியபாளையத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. முத்தியால்பேட்டை பெல்கீஸ் வீதியிலுள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் மகோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6.00 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 12.00 மணியளவில் பாற்சாகை வார்த்தலும் நடந்தது. இரவு முக்கிய நிகழ்ச்சியான அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (6ம் தேதி) பிற்பகல் 3.00 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகின்றது.