பதிவு செய்த நாள்
09
செப்
2014
12:09
திருவள்ளூர் : திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ர உற்சவம், நேற்று துவங்கியது. கோவில்களில் நடைபெறும் நித்ய பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்யக்கோரி, பவித்ர உற்சவம், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் நேற்று துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, உற்சவர் வீர ராகவருக்கு திருமஞ்சனத்துன் நிகழ்ச்சி துவங்கியது. காலை, 9:30 மணிக்கு துவங்கிய, ஹோமம் காலை 11:30 மணி வரை நடைபெற்றது. பின், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, யாகசாலை பூஜை நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு, பூர்ணாஹூதி முடிந்து, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு இடையே, உற்சவர் வீர ராகவர் மாடவீதிகளில், மாலை 5:00 மணிக்கு, வீதி உலா வந்தார். இன்றும் தொடர்ந்து, யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
தொடர்புடைய கோயில்கள் :