திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கமலா பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு தமிழில் வேத மந்திரம் முழுங்க யாக சாலை பூஜை நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிம்ம தீர்த்தம் எதிரே அமைந்துள்ள கமலா பீடத்தில் நேற்று ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு யாக சாலை பூஜை நடந்தது. இதில், 108 பெண்கள் கலந்து கொண்டு தமிழில் மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடந்தது. இதில், கமலா பீடாதிபதி சீனுவாசன் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தி வைத்தார். அப்போது, கமலதாரணி, திருமால், மற்றும் லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், கிரிவலம் சென்ற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.