கீழக்கரை : ரெகுநாதபுரத்தில் உள்ள தேவி முத்துநாச்சியம்மன், விநாயகர், கோட்டை முனீஸ்வரர், கருப்பண சுவாமி மற்றும் நவக்கிரங்கள் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.செப்., 8 அன்று முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாகுதி, லெட்சுமி, யந்திரபூஜைகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 9 மணிக்கு மேல் தெய்வச்சிலை அய்யங்கார், கோவிந்தராஜ அய்யங்கார், கணேசன் சிவாச்சாரியார் ஆகியோர் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை கும்பத்தில் ஊற்றினர். இதற்கான ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் கிழக்குத்தெரு யாதவர் மற்றும் அகமுடையார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.