பதிவு செய்த நாள்
11
செப்
2014
12:09
திருவள்ளூர்: மகா வல்லப கணபதி கோவிலில், நாளை (12ம் தேதி) சங்காபிஷேக விழா நடைபெற உள்ளது. திருவள்ளூர், ஜெயாநகர் விரிவாக்கத்தில் உள்ள குமரவேல் நகரில், மகா வல்லப கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மகா வல்லப கணபதி கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி, நாளை (12ம் தேதி) சங்கடஹர சதுர்த்தி அன்று, காலை 7:00 மணி முதல், 10:00 மணி வரை, 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அன்று, கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், கலச பூஜை, விசேஷ ஹோமம், பூர்ணாஹுதி மகாபிஷேகம் நடைபெறுகிறது.