பதிவு செய்த நாள்
12
செப்
2014
11:09
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை, 250 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை, 7:00 - 10:30 மணி வரை, மூலவருக்கு, 250 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மதியம், 12:20 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஷீரடி சாய்பாபாவை தரிசித்தனர்.