பதிவு செய்த நாள்
12
செப்
2014
11:09
கடம்பத்துார் : கடம்பத்துாரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. கடம்பத்துாரில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ௨௦ லட்சம் ரூபாய் செலவில் அங்கு திருப்பணிகள் நடந்தன. ௬௦ ஆண்டுகளுக்கு பின் நேற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. அதன்பின், மாலை, 4:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.அதன்பின், நேற்று காலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னர் மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை, 8:40 மணிக்கு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.பின், காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாணமும், மாலை சுவாமி மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடந்தது.இன்று மாலை, 4:00 மணிக்கு, விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
* திருவள்ளூர் நகராட்சி புங்கத்துாரில், திருமாலி அம்மன், வேம்புலி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில், கணபதி, கங்கையம்மன், சப்த கன்னிகள் ஆகியோருக்கும், தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா, கடந்த, 9ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜையுடன், தீபாராதனையும் நடந்தது.நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியும்; மாலையில், தேவார இசை நிகழ்ச்சியும் நடந்தன.நேற்று காலை, 7:30க்கு, மகா சங்கல்பமும், விசேஷ ஹோமம், பூஜையும் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, அம்மன் வீதி உலா நடந்தது.