பதிவு செய்த நாள்
12
செப்
2014
02:09
கும்பகோணம்: ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியையொட்டி, கும்பகோணம் பகுதியில் உள்ள, 10 கோவில்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் கடந்த, மூன்று ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் தேவார பாடல் பெற்ற தலங்களில், நடராஜபெருமானுக்கு அபிஷேகம் நடத்தி வருகிறது. அதன்படி, ஆவணி வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த, 7ம் தேதி கும்பகோணம் பகுதிகளில் உள்ள பட்டீஸ்வரம், திருசக்திமுற்றம், தாராசுரம், அவளிவநல்லூர், திருப்பாம்புரம், கிள்ளுகுடி, திருப்பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருத்தலையாங்காடு, திரு தென்குடித்திட்டை ஆகிய 10 சிவாலயங்களில் உள்ள நடராஜபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.