பதிவு செய்த நாள்
13
செப்
2014
01:09
கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகாவுக்கு உட்பட்ட, வெள்ளாங்கோவில், யானை அப்புச்சி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந் து. கடந்த, ஒன்பதாம் தேதி மாலை, ஆறு மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், முதல்கால யாக பூஜை நடந்தது. பத்தாம் தேதி இரண்டாம் காலயாக பூஜை, மண்டப வேதிகார்ச்னை, மூர்த்தி ஹோமம், மாலை, ஆறு மணிக்கு, மூன்றாம் காலயாக பூஜைகள் நடந்தது. கடந்த, 11ம் தேதி, காலை, ஆறு மணிக்கு, நான்காம் காலயாக பூஜை, காலை, 7.45 முதல், எட்டு மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடந்தது.