கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்ய இருப்பதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை செய்தபின் வினாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம் நடந்தது. ஐந்து பெண்கள் முகூர்த்தக்காலுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டபின் கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் பாலஸ்தாபனம் நடக்கிறது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் கோவில் கட்டுவதற்கு கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.