பதிவு செய்த நாள்
19
செப்
2014
12:09
பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் தங்கரதப்புறப்பாடு செப்.,24 முதல் அக்.,3 வரை தொடர்ந்து 10 நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு மேல், தங்கரதப்புறப்பாடு நடக்கும். கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி காலங்களில் தங்கரதப்புறப்பாடு நிறுத்தப்படும்.இந்த ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.,24 காலை பெரியநாயகியம்மன் கோயிலிலும், உச்சிகால பூஜை வேளையில், திருஆவினன்குடி மலைக்கோயிலிலும் காப்பு கட்டப்படுகிறது; அக்.,3 வரை நடக்கிறது. இந்த நாட்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். பின் அக்.,4 முதல் தங்கரத புறப்பாடு நடக்கும்.