பதிவு செய்த நாள்
19
செப்
2014
12:09
உடுமலை : உடுமலை அற்புத அன்னை ஆலயத் தேர்த்திருவிழா, கோலாகலமாக நடந்தது. உடுமலை, தளி ரோட்டில் அமைந்துள்ளது அருள் நிறை அற்புத அன்னை ஆலயம். ஆலயத்தின் தேர்த்திருவிழா, செப்., 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து, 14ம் தேதி வரை, தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி நடந்தது.14ம் தேதி காலை 8.00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் தலைமையில், கூட்டு பாடற்பலியும், வேண்டுதல் தேரும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு, மடத்துக்குளம் பங்கு தந்தை மரிய அந்தோணிராஜ் தலைமையில், கூட்டு பாடற்பலியும், இரவு 7.00 மணிக்கு, சர்ச் வளாகத்தில், அற்புத அன்னையின் அலங்காரத் தேர் பவனியும் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.