சென்னை: சென்னையில் உள்ள திருப்போரூர் அடுத்து சிறுதாவூரில் அமைந்துள்ளது. தென்கரை மகாராஜா கோவில். இக்கோவிலின் முக்கிய கடவுள் சுவாமி ஐயப்பன் அருள்பாலிக்கிறார். கோவிலின் காவல் தெய்வங்களாக, வீரமணி மற்றும் வடக்குவாசல் அம்மன், பேச்சியம்மன் உள்ளன. இங்கு மூலவராக இருக்கும் மகாராஜா, சுவாமி ஐயப்பனின் இளைய சகோதரர் ஆவார். இவருக்கு சித்தூர் வள்ளியூரிலும் சிறப்பு வாய்ந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலில் தினசரி பூஜையும், தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுகிழமையில் சிறப்பூ பூஜை நடைபெறுகின்றன. சிறப்பு வாய்ந்த இக்கோயில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிக்கு உதவ திரு.ஹரி சுவாமி போன் : +91 97102 72024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.