பதிவு செய்த நாள்
22
செப்
2014
12:09
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி கலைவிழா செப்., 24 ல், துவங்குகிறது. இதைமுன்னிட்டு தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், பொம்மலாட்டம் நடக்கின்றன. விழாவையொட்டி, ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க, வெள்ளி காமதேனு, சிம்ம, ரிஷப போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதேபோல், உத்திர கோசமங்கை சுயம்பு மஹாவாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்., 24 ல், துவங்கி அக்., 3 ல் நிறைவடைகிறது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி, திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் செய்துள்ளனர்.