பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2014 11:09
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் புரட்டாசி அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் அரு ணாச்சல குருக்கள் தலைமையில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டினர். யாககுண்டத்தில் ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.