நாள் செய்வதை நல்லவன் கூட செய்ய மாட்டான் என்பார்கள். அதனால், நல்ல நாள் பார்த்து வழிபட்டால் கடவுளின் அருளை எளிதாகப் பெற முடியும். ஆண்டு முழுவதும் வழிபடுவதை விட, நவராத்திரி சமயத்தில் அம்பிகையை வழிபடுவது வாழ்வில் மிகுந்த சுகத்தைத் தரும். இந்த மாதம் அடைமழை காலத்தின் துவக்கம். இந்த சமயத்தில் மனிதர்களை நோய்கள் தாக்கும். இதிலிருந்து பாதுகாப்பு வேண்டி கருணைக்கடலான அம்பாளை வணங்குகிறோம். சுண்டல் வகைகளை இந்தக் காலத்தில் சாப்பிடுவது கூட, தோல் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளத்தான். அறிவியலை ஆன்மிகத்துடன் சேர்த்து குழைத்து நவராத்திரி என்னும் விழாவாகத் தந்திருக்கிறார்கள் நமது முன்னோர்.