பதிவு செய்த நாள்
25
செப்
2014
10:09
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு கோவில்களில், நேற்று முதல் நவராத்திரி வழிபாடு துவங்கியது.
விழாவில் மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன்,சவுகார்பேட்டை தாஹிமா பவனில் உள்ள, துர்கை அம்மன், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில் காமாட்சியம்மன், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், ருத்ராட்சம் மற்றும் சாமந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம், திரு வொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், காளிகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.