நாகர்கோவிலில் இருந்து நாளை முதல் திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2014 11:09
நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு விரைவுபோக்குவரத்து கழக கிளை மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை முதல் 7ம் தோதி வரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் மாலை 2.30 மணிக்கு திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கும் அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கப்பட உளக்ளன. இந்த பஸ்கள் மதுரை, திருச்சி, திருவண்ணமாலை வேலூர் சித்தூர் வழியாக செல்லும். கட்டணம் ரூ. 575.ஆகும். இதற்கான முன்பதிவு கட்டணம் தனி. மேலும் இந்த பஸ்களுக்கு அனைத்து முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.