நாகர்கோவில்: குமரிமாவட்டம் வடசேரி, வடிவீஸ்வரம், பறக்கை பகுதிகளில் திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கடந்த ஜூன் மாதம் மீட்க பட்டது. இதன் மதிப்பு 351 கோடியே 87 லட்சம் ஆகும். இதோ போல் சுசீந்திரம் கோயிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி சொத்துக்களும் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு ஏக்கர் 57 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அங்கிருந்த சுமார் 75 வீடுகள் மற்றும் கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சிலர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதால் தேவசம்போர்டு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் சென்று கசம்பவுண்டு சுவர்களை இடித்து அப்புறப்படுத்தினர்.