ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு.. சோதனை ஓட்டம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2014 12:09
பழநி: பழநி மலைக்கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணி முடிவடைந்து, சோதனை ஓட்டம் இன்று முதல் துவங்கப்படுகிறது. பழநி மலைக்கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணிக்காக, கடந்த ஜூலை 28 ல் நிறுத்தப்பட்டது. மேல்தளம், கீழ்தளத்திலுள்ள உருளை, பல்சக்கரங்கள் கழற்றப்பட்டு, தேய்மானமடைந்த பகுதிகள் புதிதாக மாற்றப்பட்டன. எட்டு பெட்டிகளும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. ‘ரோப்கார்’ பாதுகாப்பு வல்லுனர் குழு பரிந்துரையின்படி, புதிய ஷாப்ட்கள் பொருத்தப்பட்டு இரண்டு, மூன்று பெட்டிகளாக கம்பிவட கயிற்றில் மாற்றப்பட்டன. ‘அலைமன்ட்’ சோதனை கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றுமுதல் இரண்டு நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பெட்டிகளிலும் 300 கிலோ அளவு எடை கற்கள் வைத்து ரோப்கார் இயக்கப்படும். பாதுகாப்பு கமிட்டியினர் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டு சான்றிதழ் வழங்குவர். இதையடுத்து, பக்தர்களின் பயன்பாட்டிற்காக ‘ரோப்கார்’ முழுமையாக இயக்கப்படும் என பழநி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.