பதிவு செய்த நாள்
29
செப்
2014
01:09
புதுச்சேரி: வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில், மகா சண்டியாகம் நடந்தது. குயவர்பாளையத்தில் வெள்ளந்தாங்கி ஐயனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று மகா சண்டியாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி, கடந்த 27ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அத்யாயஹோமம், நடந்தது. காலை 7.௦௦ மணிக்கு, கோ பூஜை, ௭.30 மணிக்கு சண்டியாகம் நடந்தது. பகல் 12.௦௦ மணிக்கு, சண்டிகைக்கு விசேஷ பூஜை, வடுக பூஜை, மகாலட்சுமி சண்டிகைக்கு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜவேலு, அரசு கொறடா நேரு ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.