செஞ்சி: சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. காலை 7 மணிக்கு சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், ராஜகோபலனார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவருக்கு காலை 8 மணி முதல்10 மணிவரை திருப்பாவாடை உற்சவம் நடந்தது. திருப்பாவாடை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கினர். குமார் பட்டாச்சாரியார் தலைமையில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கேட்டவரம்பாளையம் பஜனை கோஷ்டியினரின் ராம நாமாவளி பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.