பதிவு செய்த நாள்
29
செப்
2014
02:09
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழாவின் 4ம் நாள் விழாவில், சிவ குடும்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த 4ம் நாள் நிகழ்ச்சியில் பார்வதி, சிவலிங்கம், முருகன், விநாயகர் ஆகியோர், சிவ குடும்ப அலங்காரத்தில் அருள் பாலித்தனர். விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகளையும், புராதன வரலாற்று நிகழ்ச்சிகளை தத்ரூபமாக விளக்கி, கொலு வைக்கப்பட்டுள்ளது. கொலுவை, மாணவர்கள், கிராம மக்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். விழா ஏற்பாடுகளை சாரதா ஆசிரம சகோதரிகள் செய்துள்ளனர்.