ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலய விழா இன்று நடக்கிறது. முன்னதாக நேற்று இரவு மின்னொளி அலங்காரத்தில் தேர்பவனி நடந்தது. செங்குடி தூயமிக்கேல் அதிதூதர் ஆலய விழா செப்., 20 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு மின்னொளி அலங்காரத்தில் தேர் பவனி நடந்தது. முன்னதாக, செங்குடி பாதிரியார் சாமுஇதயன், அரியக்குடி பாதிரியார் மிக்கேல் ஆகியோர் தேர்பவனி திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் நிறைவு நாளான இன்று காலை திருவிழா திருப்பலியை பரமக்குடி பாதிரியார் செபஸ்டின் நிகழ்த்துகிறார். மாலை 4 மணிக்கு நடைபெறும் தேர்பவனிக்கு பின்பு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.