புதுச்சேரி : புதுச்சேரி சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 3ம் தேதி விஜயதசமியன்று துவங்குகிறது. இதுகுறித்து, புதுச்சேரி சமஸ்கிருத பாரதி கன்வீனர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரத ஒருமைப்பாடு, பண்பாடு, கலாசாரம், மனித நேயம் ஆகியவற்றின் பாரம்பரியமாக சமஸ்கிருத மொழி விளங்குகிறது. இம்மொழியின் ஆரம்பநிலை பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் வரும் 3ம் தேதி லாஸ்பேட்டை விவேகானந்த மேனிலைப்பள்ளியில் துவங்கி, பிரதி ஞாயிறு தோறும் காலை 10:௦௦ மணி முதல் பகல் 12:௦௦ வரை நடத்தப்படுகிறது.10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இருபாலரும் கலந்து கொள்ளலாம். முன் பதிவிற்கு 94861 02720 அல்லது 0413 2255445 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.