பதிவு செய்த நாள்
30
செப்
2014
03:09
சரஸ்வதி கோயில்களைக் காண்பது மிகவும் அரிதான விஷயம். இந்தியாவிலுள்ள பழமையான சரஸ்வதிகோயில்கள் பன்னிரண்டில் தமிழகத்தில் மட்டும் ஆறுகோயில்கள் உள்ளன. அதில் திருக்கண்டியூரில் சரஸ்வதி பிரம்மாவுடன் அருள்புரிகிறாள். சரஸ்வதிபூஜை நன்னாளில் இங்கு வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
சரஸ்வதி கோயில்கள்: திருவாரூர் மாவட்டம் கூத்தனுõரில் சரஸ்வதிக்கு தனிக்கோயில் இருக்கிறது. மற்ற இடங்களில் பிரகாரங்களில் சரஸ்வதி சிலையைக் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி வெளிப்பிரகாரத்தில் உள்ள சரஸ்வதி விழாக்காலத்தில் வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கும். வைணவத்தலமான ஸ்ரீவில்லிப்புத்துõரில், ஆண்டாள் சந்நிதி நுழைவு வாசலில் உள்ள சரஸ்வதி சிலை பிரமாண்டமானது. இந்த சரஸ்வதியின் உயரத்தையும், வடிவமைப்பையும் பார்ப்பவர் உள்ளத்தைக் கவரும் எழில் கொண்டதாகும். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலிலும் எழில் மிகு சரஸ்வதி சிலை இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் ஆகிய இடங்களிலும் சரஸ்வதி சிலைகள் உள்ளன. ஆனால், தம்பதி சமேதராக உள்ள சரஸ்வதியை தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் சிரகண்டீஸ்வரர் கோயிலிலும், ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் (புஷ்கரம்) உள்ள பிரம்மா கோயிலில் மட்டுமே காண முடியும். இது தவிர காஷ்மீர், மல்லிகார்ஜூனம், செகந்திராபாத், ஐதராபாத், பாஸாரா (ஆந்திரா) ஆகிய ஊர்களில் புகழ்பெற்ற சரஸ்வதி சந்நிதிகள் உள்ளன. ஜாவா, பாலி, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா நாடுகளிலும் சரஸ்வதி வழிபாடு நடக்கிறது.