Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆயுதபூஜை என்பது ஏன்? அன்ன வாகன தத்துவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரோஜா இதழினைப் போல் மாறாத வாசமடா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
03:09

உள்ளத்தை துõய்மையாக வைத்துக் கொள்ளாமல், வெறும் தத்துவங்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்வதும், பிறரை ஏளனமாகக் கருதுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் விவேகமான செயல் அல்ல.  தர்மம் செய்யும் போது கோபம் கொள்வதோ, கடுமையான சொற்களைச் சொல்வதோ பாவம் ஆகும். நாம் கொடுத்த தர்மம் போதாது என்று கேட்கும் போது கூட, சாந்தமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைப்பதே சிறந்தது. உயர்ந்த கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழு வரையிலும் அனைத்து உயிர்களிலும் உயர்வு தாழ்வு கருத வேண்டாம். உண்மையான சாது என்பவன் நட்பு பகை, சுகதுக்கம், இன்பதுன்பம் என எதிரான இரு நிலையிலும் சமநிலை இழக்க மாட்டான். மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளை அனுபவித்தே ஆக வேண்டும். அதற்காகவே உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணக்காரன் வீட்டு நாய் மெத்தையில் உறங்குவதும், ஏழை வீட்டு நாய் குப்பையில் படுத்திருப்பதற்கும் கூட காரணம் முன் செய்த வினைப்பயனே. இன்பமாகத் தெரியும் எதுவும் உண்மையில் இன்பமும் இல்லை. துன்பமாக இருக்கும் எதுவும் உண்மையில் துன்பமும் இல்லை. இரண்டும் எப்போதும் கலந்தே இருக்கும்.  அறுசுவை விருந்தைச் சாப்பிட்டாலும், கூழோ, ரொட்டியோ சாப்பிட்டாலும் முடிவு தான் என்ன? வயிற்றுப் பசி நீங்குவது ஒன்றே. அவரவர் மனதைப் பொறுத்து அது அது தேவாமிர்தம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே புத்திசாலித்தனம். இல்லாததை நீங்கி ஏங்கிக் கொண்டிருந்தால் என்றும் மனதில் அமைதி நிலைக்காது. செல்வவளம் நிறைந்தவர்கள் பணிவான உள்ளத்துடன், ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். பழுத்திருக்கும் மரம் தலைக்கனம் இன்றி தாழ்ந்து வளைந்து நிற்பதைப் பாருங்கள். உலக நடப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தாலும், ஒருபோதும் கடவுளை மறந்து விடுவது கூடாது. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடம் என்று ஒரு இடமும் கிடையாது. அசைகின்ற, அசையும் எல்லாப் பொருள்களிலுமே கடவுள் நிறைந்திருக்கிறார்.  மனம் முரட்டுத்தனமானது. அதை எளிதில் அடக்க முடியாது. ஆனால், அதன் தயவு இல்லாமல் கடவுளை அறியவும் முடியாது.  நல்லது கெட்டது பார்க்காமல் அமரும் ஈயைப் போல மனதை அதன் போக்கில் விட்டால் கண்டதற்கும் ஆசை கொண்டு அதில் மூழ்கிவிடும். உருவ வழிபாட்டைப் புறக்கணிப்பது கூடாது. மனம் ஒருமுகப்பட அதுவே சிறந்தவழி. கடவுளை உருவத்தில் கண்டு பூஜிக்கும் போது எல்லையில்லா இன்பம் பெருக்கெடுக்கும்.  நல்லொழுக்கம் இருந்தால் ரோஜாவின் இதழ்களைப் போல் மாறாத வாசனையை அனுபவிக்கும் உணர்வை அனுபவிக்கலாம். எதிரிகளையும் மன்னிக்கும் பக்குவம் இருந்தால் என்றும் மாறாத பாசத்தைக் காட்டலாம். பிறர் அடையும் இன்பம் கண்டு மகிழ்வதைப் போல புண்ணியம் வேறில்லை. பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்வது போல கொடிய தோஷம் வேறில்லை. நோய், வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்வதன் மூலம் கடவுளின் அன்பிற்கு உரியவராக முடியும்.

மகான் ஷீரடி சாய்பாபா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar