உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் துர்க்காதேவி சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2014 02:10
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது. உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. நவராத்திரி விழாவை ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 26ம் தேதி சென்னை கலை மகள் எடிட்டர் சங்கரசுப்ரமணியன், 27ம்தேதி சென்னை அரசு செயலர் (வனத்துறை)ராஜ்வர்மா, 29ம் தேதி சேலம் ஏவிஆர் சொர்ண மகால் சேர்மன் சுதர்சனம், சேலம் ஆரிய வைசிய மகிலா வைப தலைவர் சுகந்திசுதர்சனம் கலந்து கொண்டனர். இறுதி நாளான நேற்று சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்தபிரேம பிரியா அம்பா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 25, 26,27ம் தேதி நவராத்திரி விழாக்களில் துர்க்காதேவி சிறப்பு அலங்காரத்திலும், 28,29, 30ம் தேதிகளில் லட்சுமி சிறப்பு அலங்காரத்திலும், 1,2,3ம் தேதிகளில் சரஸ்வதி சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். நவராத்திரி விழாவில் சோமகாந்த மன்னனின் வாழ்க்கை வரலாற்றை சித்திரித்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சாரதா ஆசிரம சகோதரிகள் செய்திருந்தனர்.