தீவனூர் பெருமாள் கோவிலில் இன்று கருட வாகன வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2014 02:10
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மூலவர் பெருமாள் சுவாமிக்கு ஆராதனைகள் செய்து, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்து வருகிறார்.