திருச்சி கோவில்களில் இன்று ஸ்வாமிக்கு கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2014 02:10
திருச்சி: மன்னார்புரம் ஸ்ரீ மகாலட்சுமி தயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, 10 மணிக்கு பெருமாள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணிக்கு மஹா தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கரியமாணிக்கம் சீதா லட்சுமண-ஸ்ரீ ராம பிரான் கோவிலில், இன்று மதியம், 12.30 மணிக்கு, ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இரவு, 10 மணிக்கு ஸ்ரீராமபிரான், கருட வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.